Translate

Sunday, July 19, 2020

ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் பரிகாரம், வழிபாட்டுக்கு தடை

ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் பரிகாரம்,  வழிபாட்டுக்கு தடை
பக்தர்கள் வந்து ஏமாற வேண்டாம்
கோவில் நிர்வாகம் வேண்டுகோள்!

 பவானி-ஜூலை-19
20-07-2020 திங்கள்கிழமை ஆடிமாத அமாவாைசை அன்று பவானி கூடுதுைறயில் பரிகாரம், திதி மற்றும் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில்  புகழ்பெற்ற பரிகாரத் தலமான ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பரிகார பூஜைகள், மூத்தோர் வழிபாடு மற்றும் புனித நீராட அனுமதியில்லை என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் ஆறுகள் , நீர்நிலைகள் சங்கமிக்கும்  இடங்களிலும், ஆற்றோரங்களிலும் மறைந்த தங்களது  மூத்தோருக்கு வழிபாடு செய்தால் , அதன் பலன் நேரடியாக மறைந்த மூத்தவர்களை அடைந்து அவர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.

இவ்வாறு வழிபாடு செய்வதால் குடும்பத்தில் தீமைகள் விலகி நன்மை பிறக்கும் என்பதும் நம்பிக்கை. இதனால், காவிரி, பவானி மற்றும் அமுத நதிகள் சங்கமிக்கும் பிரசித்தி பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில்  ஏராளமானோர் திரண்டு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இன்னிலையில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு உத்தரவின்பேரில் காவிரி ஆற்றில் நீராட செல்லும் வழியில் தடுப்புகள் வைத்துக் கட்டப்பட் டு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆடி அமாவாசை தினமான நாளை திங்கள்கிழமை (ஜூலை.20) பக்தர்கள் கூடுதுறை கூடுதுறைக்கு வர பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது

 இதனால், வெளியூர் பக்தர்கள் வாகனங்களில் பவானி கூடுதுறைக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். வெளியூர் பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து ஏமாற வேண்டாம் என பவானி சங்கமேஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 தடை உத்தரவினைப் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அரசின் உத்தரவை மீறி  வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Featured Post

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்

திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமா...

POPULAR POSTS