Translate

Saturday, July 25, 2020

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்





திருப்பத்தூர்.
பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமாள் கோவில் அருகில் உள்ள குளத்தை புலிகுட்டை ஊரைச் சார்ந்தவர்கள் தலைமையில்  குலத்தை தூய்மை செய்தனர். 
மேலும் கோயில் அருகில் 150 செடிகள்  வேம்பு,  புங்கை, ஆலமரம், அரசமரம், பூவரசன் போன்ற பல வகை செடிகளை பசுமை தாய்நாடு உறுப்பினர்கள் மற்றும் புலிக்குட்டியை சார்ந்த இளைஞர்கள் சேர்ந்து செடிகளை நட்டனர். 

கிருஷ்ணமூர்த்தி 
செய்தியாளர் 
மக்கள் சந்திப்பு நாளிதழ் 
9442416077

Friday, July 24, 2020

பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இடஒதுக்கீட்டை பறிக்க நினைப்பவர்களுக்கு துணைபோகவேண்டாம் - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

anbumani ramadoss: Latest News, Videos and anbumani ramadoss ...

மத்திய அரசு பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கிரிமிலேயர் முறையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய திருத்தம் குறித்து பா.ம.க அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில், ‘மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயரை தீர்மானிக்க மொத்த சம்பளமும் சேர்க்கப்படும் என்ற முந்தைய திட்டம் கைவிடப்பட்டு, வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும் நிகர வருமானத்தை மட்டும் கணக்கில் சேர்க்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், சமூகநீதியைக் காக்க அது உதவாது என்பதால் புதிய திட்டத்தையும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக 1993-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்போது சம்பளம், வேளாண் வருமானம் ஆகியவை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்போவதாக கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கும், மத்திய அரசின் முடிவை ஏற்க தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தீர்மானித்ததற்கும் பா.ம.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து மத்திய சமூக நீதித் துறையும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் நடத்திய ஆலோசனையில், கிரிமீலேயரை கணக்கிடுவதில் பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருவாயுடன், சம்பளத்தை முழுமையாக சேர்ப்பதற்கு பதிலாக, வருமானவரிக்கு உட்படுத்தப்படும் நிகர வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ளலாம் என்றும் கிரீமிலேயர் வரம்பை ஆண்டுக்கு ரூ.12 லட்சமாக உயர்த்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்டோர் நலனைக் காப்பதற்காக மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை தளர்த்தியிருப்பது போலத் தோன்றினாலும், புதிய திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்காது என்பதே உண்மை.

மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் அறிவித்த புதிய வருமானவரி முறையின்படி, நிரந்தரக் கழிவு ரூ.2.50 லட்சம் தவிர வேறு எந்த வரி விலக்கும், கழிவுகளையும் கோர முடியாது. அத்தகைய சூழலில் அரசு அல்லது பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றும், சம்பளத்தை மட்டுமே ஒரே வருவாய் ஆதாரமாகக் கொண்டவர்களின் மொத்த சம்பளத்துக்கும், நிகர வருமானத்துக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. கூடுதலாக பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் கிடைக்கும் குடும்பங்களாக இருந்தால், அவர்களால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. புதிய திட்டமும் சமூக அநீதியாகவே அமையும்.

நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை, கிரீமிலேயர் வரம்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பறிக்க மத்திய அரசு துடிப்பது ஏன்? என்பது தான் தெரியவில்லை. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் சம்பளமும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்பட்டது தான் பிரச்சினையில் தொடக்கம் ஆகும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்று நீதிமன்றங்கள் ஆணையிட்ட நிலையில், பொதுத்துறை, தனியார்துறை பணியாளர்களின் சம்பளம் கணக்கில் கொள்ளப்பட்டது 1993-ஆண்டின் அலுவலக குறிப்பாணைக்கு எதிரானது என்பதால், அந்த முறையை கைவிடும்படி சொல்வது தான் சரியான தீர்வாக இருக்கும். அதைவிடுத்து, அரசு பணியாளர்களின் சம்பளத்தையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று ஆணையிடுவது 1993-ஆம் ஆண்டின் குறிப்பாணைக்கு எதிரானது.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இப்போது தான் முதல் தலைமுறையினர் மத்திய அரசு வேலை மற்றும் உயர்கல்வியை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்குள்ளாகவே பல்வேறு தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தி, சமூகநீதி மரம் முழுமையாக வளர்வதற்கு முன்பாகவே அதை வெட்டி வீழ்த்த பலர் முயல்வதும், மத்திய அரசின் முடிவுகள் அதற்கு சாதகமாக இருப்பதும் வேதனையளிக்கிறது.

கடினமான நிபந்தனைகளை விதித்து, பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் கிரீமிலேயராக அறிவித்து விட்டு, அவர்களிடமிருந்து இட ஒதுக்கீட்டைப் பறித்து, பொதுப்பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்பது தான் சிலரது விருப்பம் ஆகும். இதற்கு மத்திய அரசு எந்த வகையிலும் துணை போகக்கூடாது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முழுமையாக அவர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்கு பெரும் தடையாக உள்ள கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும். அது உடனடியாக சாத்தியப்படாவிட்டால், சம்பளத்தை சேர்க்காமல், கிரீமிலேயர் வரம்பை இப்போதுள்ள 8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

IAS ஆக வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்திய மலைவாழ் மாணவியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட சேலம் எஸ்.பி


சேலம் : ஐ.ஏ.எஸ் படிக்க விருப்பம் தெரிவித்த மலைவாழ் மாணவியின் 2 ஆண்டுகளுக்கான கல்விச்செலவை சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்துள்ளது கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம். இதில் 33 மலைவாழ் குக்கிராமங்களை கொண்ட பாலமலை பஞ்சாயத்து உள்ளது. இம்மலை கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில்தான் இப்பகுதிகளுக்கு சாலை வசதி மற்றும் மின்சார வசதி கிடைத்துள்ளது. இங்கு ராமன் பட்டி என்ற மலை கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட உயர் நிலைப்பள்ளியில் 140 மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் நேற்று முன் தினம் மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

IAS ஆக வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்திய மலைவாழ் மாணவியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட சேலம் எஸ்.பிஅப்போது அங்கு 10-ம் வகுப்பு முடித்த மாணவி ஜெயந்தி (16) எஸ்.பி.,யை சந்தித்து தனது ஐ.ஏ.எஸ் படிக்கும் தனது ஆசையை தெரிவித்தார். இதனையடுத்து மாணவியை தனது சேலம் அலுவலகத்திற்கு அழைத்து, அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் வழங்கி 2 ஆண்டுகள் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மாணவிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

ஒரே நாளில் 49,310 பேருக்கு பாதிப்பு..

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 49,310 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில பரவி வருகிறது. கடந்த இரு நாட்களாக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோல் உயரிழப்பு எண்ணிகை பிரேசில் அமெரிக்கா நாடுகளை போல் உச்சமாகி வருகிறது. தினமும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.

நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33,326 பேர் குணம் அடைந்ததால், இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8,17,209 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஒரே நாளில் 740 பேர் மரணம் அடைந்தனர். இதனால் இதுவரை கொரோனாவால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,601 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக நேற்று மகாராஷ்டிராவில் 9,895 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு மொத்த பாதிப்பு 347,502 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் ஒரே நாளில் 6484 அதிகரித்துள்ளது. இது வரை மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து 194253 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 12854 பேர் உயிரிழந்துள்ளனர்.

2வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு நேற்றுஒரே நாளில் 6472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு 192964 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5210பேர் குணம் அடைந்தனர். இதனால் மொத்த குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 136793 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 52939 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 3232 பேர் உயிரிழந்துள்ளனர்.

Thursday, July 23, 2020

சென்னையில் கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை ரூ 39 ஆயிரத்தை நெருங்கியது!

சென்னை:23
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ 39 ஆயிரம் நெருங்குகிறது. அதாவது இன்று ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்வதை போல் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

Gold price tops record Rs 40,000 mark as recession fears deepen ...The Health Benefits of Wearing Silver Jewelry

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.74 உயர்ந்து ரூ.4,847-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.50 அதிகரித்து ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து நகைக் கடைக்காரர்கள் கூறுகையில் இந்த ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை எட்டும் என்றனர். இதனால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர்.

கொரோனா இன்று ஒரு புதிய உச்சத்தை தொட்டதா ?

திருப்பத்தூர் - 23,
தமிழகம் முழுவதும் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6472 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1336 நபர்கள். 5210 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 88 நபர்கள் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 74 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 728 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 465 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 257 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 நபர்கள் தொற்றால் இறந்துள்ளனர்.
 
😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇

மத்திய அரசின் நான்கு அவசர சட்டங்களும், விவசாயிகளின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாகும் - வைகோ

மலராத மறுமலர்ச்சியும் வைகோவின் ...


சென்னை-.23
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி வரும் துயரத்தால் கடந்த ஐந்து மாதங்களாக நாட்டு மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்து, வாழ்வாதாரங்களை முற்றிலும் பறிகொடுத்துவிட்டு, எதிர்காலம் இருள் அடைந்து கிடக்கின்ற வேதனையில் தவிக்கின்றனர். கொரோனா பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் மாநில அரசுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு தனது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்படாமல், மாநிலங்களை அடக்கி ஆளும் எதேச்சாதிகாரத் தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தம்-2020 மற்றும் ஜூன் 3, 2020 இல் பிறப்பிக்கப்பட்ட மூன்று அவசரச் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஆகியவை விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கும் சட்டங்களாகும். நாடாளுமன்றத்தில் விவாதித்து, மாநிலங்களின் கருத்துகளையும் அறிந்து வேளாண் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவராமல், தானடித்த மூப்பாக மோடி அரசு செயல்படுவது, இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்து, மாநில உரிமைகளை நசுக்கும் 'பேரரசு' மனப்பான்மை ஆகும்.

வேளாண் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து, டெல்லியின் ஏகபோக ஒற்றை அதிகார ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் மேற்கண்ட நான்கு சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஏனெனில், விவசாயிகள் வேளாண் தொழிலுக்கு பெற்று வரும் இலவச மின்சார உரிமையை, மின்சாரச் சட்டத் திருத்தம்-2020 முற்றிலும் நிராகரிக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 திருத்தச் சட்டம் தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களிலிருந்து நீக்கி உள்ளது. இதனால் சந்தையில் இவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமை பெருநிறுவனங்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். மேலும் பதுக்கல்காரர்களால் விலையேற்றம் மக்களைப் பாதிக்கும்.

"ஒரே நாடு; ஒரே வேளாண் சந்தை" என்பதை நிலைநாட்ட வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020 கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை இந்தியாவில் எங்கு கொண்டுபோய் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் என்று மத்திய அரசு கூறுவது ‘கேழ்வரகில் நெய் வடிகிறது' என்ற முதுமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. நடைமுறைச் சாத்தியமற்ற, விவசாயிகளுக்குப் பாதகமான இச்சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும். விவசாயிகளிடம் நேரடியாக அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை கொள்முதல் செய்வது மட்டுமின்றி, சந்தையை தங்கள் விருப்பப்படி பெருநிறுவனங்கள் ஆட்டிப் படைக்கும் நிலைதான் உருவாகும். தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக்குழுச் சட்டங்கள், வேளாண் கொள்முதலை இனிக் கட்டுப்படுத்த முடியாது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழித்துக்கட்டப்பட்டு, தனியார் கொள்முதல் நிலையங்கள் பெருகும்.

இது விவசாயிகளுக்குச் செய்யப்படும் பச்சைத் துரோகம் அல்லவா? விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு), விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியில் பெருவர்த்தக நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கிறது. இதனால் வேளாண் தொழிலை பெரு வணிகக் குழுமங்களிடம் பறிகொடுத்துவிட்டு, விவசாயிகள் நிலங்களை விட்டு வெளியேறி, சொந்த மண்ணிலேயே பஞ்சைப் பராரிகளாக அலையும் நிலையை உருவாக்கிவிடும். அந்த நிலைமை ஏற்பட வேண்டும் - வேளாண் நிலங்களைப் பறிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டமாகும்.

விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 27 ஆம் நாள், விவசாயிகள் நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி எதிர்ப்புத் தெரிவிப்பது என்றும், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இணைந்து மாவட்டங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரகடனம் செய்திருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், அவசரச் சட்டங்களைத் திருப்பப் பெறக்கோரியும் ஜூலை 27 ஆம் நாள் நடைபெற உள்ள கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவை அளிக்கிறது. வேளாண் தொழிலைப் பாதுகாக்க கழகக் கண்மணிகளும், பொதுமக்களும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். மாவட்டங்களில் நடைபெறும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

சென்னைக்கு திரும்ப இ-பாஸ் சுமார் ஐந்து லட்சம் விண்ணப்பம் குவிகிறது.

சென்னை:23
             சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னைக்கு வருவதற்கு மட்டுமே சுமார் 5 லட்சம் பேர் இ பாஸ் கோரி விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று மட்டும் 5849 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 186492 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 89561 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையை விட மற்ற மாவட்டங்களில் தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சென்னையில்தான் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தது. ஆனால் தற்பொழுது சென்னையில் பாதிப்பு குறைய தொடங்கியது. அதிலும் தற்போது தினசரி கேஸ்கள் 1200க்கும் குறைவாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை பெரிய அளவில் சென்னை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகி வருகிறது

கடந்த மாதம் சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக லாக்டவுன் போடப்பட்டது. மிக தீவிரமான லாக்டவுன் போடப்பட்டது. இதற்காக சென்னையில் இருந்து லட்சக்கணக்கில் மக்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். சென்னையில் பாதிப்பு அதிகமானதால், தீவிர லாக்டவுன் கொண்டு வரப்பட்டதாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னையை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலையில் தற்போது சென்னையில் கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. மாறாக மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னைக்கு மீண்டும் மக்கள் திரும்ப முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு மீண்டும் வந்து தங்கள் பணிகளை தொடங்க இவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். சென்னையில் நிலைமை நன்றாக இருப்பதால் மீண்டும் சென்னைக்கு திரும்ப இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக இ பாஸ் கோரி மக்கள் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர். சென்னைக்கு மீண்டும் வர வேண்டும் என்று ஏறத்தாழ 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மொத்தமாக 492149 பேர் அடுத்தடுத்து இ பாஸ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் பலர் பணியில் சேர வேண்டும் என்ற காரணத்தை கூறி உள்ளனர். இன்னும் சிலர் எந்த விதமான குறிப்பிடத்தகுந்த காரணத்தையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. சென்னையில் கொரோனா மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மிகவும் கண்டிப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக இ பாஸ் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில் கறாரான நடவடிக்கையை கடைபிடிக்கிறார்கள். அதன்படி மொத்தம் 1,61,764 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்திய எல்லையில் அதி நவீன ஆயுதங்களுடன், 40 ஆயிரம் சீன ராணுவ வீரர்கள் குவிப்பு..!

டெல்லி - 23. பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும்கூட, இந்திய எல்லையிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இன்னமும் சுமார் 40,000 சீன ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் எல்லையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. ராணுவ வட்டார தகவல்களை மேற்கோள்காட்டி ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: சீன ராணுவம் எல்லையில் இருந்து பின் வாங்குவதற்கு தயாராக இல்லை. எல்லைப் பகுதிகளில் சுமார் 40,000 சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வான்வெளி தாக்குதல் தடுப்பு கருவிகள், நீண்ட தூர இலக்குகளை குறிவைத்து தாக்கக்கூடிய பீரங்கிகள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு வடக்கு பகுதியில் சீன ராணுவம் முழுமையாக பின்வாங்கவில்லை. இந்தியாவுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதியை மதிக்கவில்லை. ராணுவ உயர்மட்ட அளவிலான அழுத்தம் இந்த விஷயத்தில் தேவைப்படுகிறது. தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் சில வாரங்களுக்கு முன்பாக சீனாவுடன் நடத்தியது போன்ற பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட தேவையுள்ளது. அல்லது சீன ராணுவம் பின்வாங்குவதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக, அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

China's Modernizing Military | Council on Foreign Relations
சீன ராணுவம்

தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி.! - ஆளுநர் மாளிகை

அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Summer rains in Tamil Nadu continue Weather Research Center ...

சென்னை:

          தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை,நீலகிரி,சேலம், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Wednesday, July 22, 2020

புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரி: 2020-21 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.  புதுச்சேரியில் கடந்த
20ம் தேதி கவர்னர் உரையும் அதைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை செயலகம் அறிவித்தது. 20ம் தேதியன்று சட்டசபைக்கு கவர்னர் வராமலே பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் கோப்புக்கு ஒப்புதல் தரப்படுமா? என்று கிரண்பேடியிடம் கேட்டதற்கு, பட்ஜெட்டுக்கு ஒப்புதலை தந்துள்ளேன் சட்டப்பேரவையில் ஆளுநரான என்னை உரையாற்ற அழைத்தனர். அதன்படி வரும் 24ம் தேதி (நாளை) சட்டப்பேரவையில் உரையாற்றுகிறேன் என தெரிவித்தார். இதையடுத்து 3 நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.



யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் ஒருவர் கைது

கிருஷ்னகிரி: கிருஷ்ணகிரி உரிகம் வனச்சரகத்தில் யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் தம்மண்ணா என்பவரை போலீசார் கைது செய்தனர். வன விலங்குகளை பாதுகாக்க பிலிக்கல் காட்டுப்பகுதியில் தற்காலிக வேட்டை தடுப்பு முகாம் அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

திருப்பத்தூர், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பத்தூர் -22.

திருப்பத்தூர், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி, காந்தி மஹால் திருமண மண்டபம் அருகில் ஒரே வீட்டில் 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  3 நபர்கள் தனிமைபடுத்தி உள்ளனர். ஆதியூர் செல்லும் சாலை அடைக்கப்பட்டுள்ளது .





இன்று பதவியேற்ற அதிமுக எம்பிகள் மூன்று பேருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: அதிமுக எம்பிகளாக பதவியேற்ற மூன்று பேருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலங்களின் தேவைகளை மத்தியில் எடுத்துரைத்து மக்கட்பணியாற்ற, மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பொறுப்பேற்றிருக்கும் திரு.கே.பி.முனுசாமி அவர்கள், டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் மற்றும் திரு.ஜி.கே.வாசன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.



+2 மாணவர்கள் மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: +2 மாணவர்கள் மறுக்கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு வரும் ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.


அரசு நிர்வாகத்தில் இந்தியா வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது. பிரதமர் மோடி உரை

https://www.hindustantimes.com/rf/image_size_444x250/HT/p2/2020/03/19/Pictures/_738d9226-69ff-11ea-963c-5f43816952e0.png

டெல்லி: அமெரிக்க - இந்தியா தொழில்கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இப்பொது உலகிற்கு சிறப்பான எதிர்காலம் தேவைப்படுகிறது. மேலும் தொழில் செய்ய வேண்டியதை எளிதாக்க வேண்டியது அவசியம். உலக பொருளாதார நிலையை எதிர்கொள்ள உள்ளூர் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். அரசு நிர்வாகத்தில் இந்தியா வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நியாயவிலை கடையில் தரமற்ற அரிசி ! பொதுமக்கள் புகார்!

நியாயவிலை கடையில் தரமற்ற அரிசி ! பொதுமக்கள் புகார்!


வேலூர் - 22, 
           வேலூர் சலவன்பேட்டை லட்சுமிபுரம், அமுதம் -1 நியாயவிலை கடையில் பிரதமர் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததன்  அடிப்படையில்  இன்று காலை சுமார் 10.30 மணியளவில் 3வது மண்டலம் 37 வது வார்டு அனைத்து பாஜக வினர் இணைந்து பத்திரிக்கையாளர் துணையுடன் நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். 

           அதன் அடிப்படையில் தரமற்ற அரிசி இருப்பதும். மேலும் கடையை சுற்றிலும் சுகாதாரமற்று காணப்படுவதை கண்டு நியாயவிலைகடை விற்பனையாளரிடம் விசாரித்தபோது 'எங்களுக்கு அரசு அனுப்பும் அரிசியை தான் நாங்கள் வழங்குகிறோம்'. என்று தெரிவித்தனர். 

        ஆனால் பிற அரிசிமூட்டைகளை பிரித்துப்பார்த்தபோது நல்ல அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

          அதன்பின்னர் தரமற்ற அரிசி பெற்றவர்களிடம் இருந்து திரும்ப பெற்று நல்ல அரிசியை வழங்குகிறோம் என நியாய விலைக்கடை விற்பனையாளர் தெரிவித்தார். 
              
          தரமான அரிசியை வழங்கவேண்டும், நியாயவிலை அங்காடி அருகில் சுத்தமாக பராமரிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய பிரதேச கவர்னர் இறப்புக்கு தமிழக முதல்வர் இரங்கல்

சென்னை : மத்திய பிரதேச மாநில கவர்னர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை  பலனின்றி (21.7.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான்  வேதனை அடைந்தேன்.  மூத்த அரசியல்வாதியான லால்ஜி டாண்டன், உத்தர பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பீகார் மாநில ஆளுநராகவும்  திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். பொது வாழ்விலும், மக்கள் சேவையிலும் இவருடைய பணி மகத்தானது.  

லால்ஜி டாண்டனின் மறைவு, உத்தர பிரதேச மாநில மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை  பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Tuesday, July 21, 2020

பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம்

இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்து பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை latest tamil news சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்தவர், ஐ.ஏ.எஸ். அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள லால்பகதுார் சாஸ்திரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஐ.ஏ.எஸ்.அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்ற ஐ.ஏ.எஸ். அமுதா தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவந்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகிய மூவரின்

பிரதமர் அலுவலக இணைச் செயலளர் அமுதா ஐ ஏ எஸ் அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார் .


நாளை முதல் ஊரடங்கு கிடையாது! - முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு: கொரோனா பிரச்னைக்கு ஊரடங்கு மட்டும் தீர்வாகாது. நாளை (ஜூலை 22)முதல், கர்நாடகாவில் ஊரடங்கு இருக்காது என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது. பொருளாதாரம் மிகவும் முக்கியம் என்பதால், மக்கள் வேலைக்கு செல்ல வேண்டும். பொருளாதாரத்தை நிலைநாட்டி கொண்டே கொரோனாவை எதிர்த்து போராட வேண்டும். கொரோனாவிற்கு ஊரடங்கு மட்டும் தீர்வாகாது. தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கும்.

மஹாராஷ்டிரா, தமிழகத்தில் இருந்து வருபவர்களால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. கொரோனா பிரச்னைக்கு நிபுணர்கள் ஒரு புதிய திட்டத்தை தெரிவித்துள்ளனர். பாதிப்பை கண்டறிதல், தடமறிதல், பரிசோதனை, சிகிச்சை, மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பரிந்துரை செய்துள்ளனர். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கேரளத்தில் ஒரே நாளில் 720 பேருக்கு கொரோனா தொற்று

latest tamil news
பினராயி விஜயன்
திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா தொற்று ஒரே நாளில் மேலும் 720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலத்தின் பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், கேரளத்தில் இன்று புதிதாக 720 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,994 ஆக உயர்ந்தது. இதுவரை 44 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 8,056 பேர் சிகிச்சையில் உள்ளது.

➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠➠

செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சந்தாதாரர்களிடமிருந்து சந்தாவிற்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக்கூடாது; மீறி வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் .

திமுக நகர செயலாளர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை - 21.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திமுக நகர செயலாளர் கோட்டை பாபு. கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா காலமானார்!.

திருப்பத்தூர்-21

ஆம்பூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா (52) உடல்நலக்குறைவால் செவ்வாய்கிழமை அதிகாலை காலமானார்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இவர், தொகுதி மறு சீரமைப்பு மூலம்  ஆம்பூர் தொகுதி மீண்டும் உருவான பிறகு 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைக்கான தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.

அஸ்லம் பாஷாவின் மறைவிற்கு இஸ்லாமிய அமைப்புகள், வக்பு வாரிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அ.அஸ்லம் பாஷா

`இளைஞரின் மரணம் வருத்தமளிக்கிறது!’ - திருப்பத்தூர் எஸ்.பி.

திருப்பத்தூர்-ஜூலை-21.

எஸ்.பி. விஜயகுமார்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்த முகிலன் (27). கடந்த ஞாயிற்றுக்கிழமை (12-ம் தேதி), முழு ஊரடங்கை மீறி தேவையில்லாத காரணங்களுக்காக பைக்கில் வெளியில் சுற்றியதாகக் கூறப்படுகிறது. வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆம்பூர் நகர போலீசார் முகிலனின் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முகிலன், அருகில் உள்ள தன் அக்கா வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய் கேனை  கொண்டுவந்து.`போலீஸ்தான் என் சாவுக்கு காரணம்’ என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் நின்றபடி தீக்குளித்தார்.

முகிலன்

இதில், பலத்த தீக்காயமடைந்த முகிலன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. மருத்துவக் குழுவின் சிறப்பு கவனிப்பில் இருந்த முகிலன், 9 நாள்களுக்குப் பிறகு, சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இறந்த நபருக்கு 6 மாத கைக் குழந்தை உட்பட சின்ன சின்னதாக மூன்று குழந்தைகள் இருக்கிறது. குடும்பச் சூழல் இப்படியிருக்க அவர் தற்கொலை முடிவை எடுப்பதற்கு மதுவும் ஓர் காரணம் என்று நினைக்கிறோம். மருத்துவத்துக்கான செலவு மட்டும் கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் ரூபாய் ஆகியிருக்கிறது. காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். இறந்த நபரின் மனைவிக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், விதவைக்கான மாதாந்தர உதவித் தொகை கிடைக்கவும் கலெக்டர் மூலமாக ஏற்பாடு செய்திருக்கிறோம்’’ என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

கருப்பர் கூட்டம் யு டுயூப் சானலில் உள்ள அனைத்து வீடியோக்களும் நீக்கம். யூ டியூப் நிறுவனம் நடவடிக்கை.

கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது புகார் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழகத்தில் பலரும் கடுமையாக குரல் கொடுத்தனர்.

இந்நிைலயில் யூ டியூப் சேனல் நிறுவனர் மற்றும் தொகுப்பாளர் கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில்  கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் யூ டியூப் மூலம் நீக்கப்பட்டது.

அடுத்து மொத்தமாக இந்த சேனலை நீக்க பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூ டியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இன்று இரவுக்குள் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மொத்தமாக முடக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக-வினர் ஆர்பாட்டம்



திருப்பத்தூர்-ஜூலை -21.
தமிழகம் முழுவதும் மின்கட்டண உயர்வை கண்டித்து திமுக வினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் நகரத்தில் திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லதம்பி மற்றும் திருப்பத்தூர் நகர கழக செயலாளர் எஸ். ராஜேந்திரன் மற்றும் திமுகவினர் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கமிட்டனர்.

கொரோணா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மக்களுக்கு மின்சார கட்டணம் சலுகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

கிருஷ்ணமூர்த்தி.
செய்தியாளர்
ஐ நா வாழ்த்து பெற்ற மக்கள் சந்திப்பு நாளிதழ்
9442416077

Monday, July 20, 2020

இணையதளம் மூலம் மின்சார கட்டணத்தை அறியும் வசதி


www.tangedco.gov.in இணையதள முகவரிக்கு சென்று, ‘மின்கட்டண சேவைகள்’ (பில்லிங் சர்வீஸ்) பகுதிக்கு செல்ல வேண்டும். அங்குள்ள மின்கட்டண விவரம் (பில் ஸ்டேட்டஸ்). இணையதள மின் கட்டணம் (ஆன்லைன் பில் பேமென்ட்), கணக்கு விவரம் (அக்கவுண்ட் சம்மரி), மொத்த தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த மின் கணக்கீட்டு முறையில் மின் நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பத்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகவும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறி உள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா

சென்னை-ஜூலை-21.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெருங்கிய உறவினர் தொடர்பு மூலமாக குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஆக. 1ம் தேதி முதல் பத்திர பதிவில் அதிரடி மாற்றம்.. பத்திரபதிவு செய்தவுடன் பட்டா மாறும்!

சென்னை: ஜூலை-20.
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரபதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அவை பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு வாங்கியவர் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார பட்டா வழங்குவார். இதுவே இப்போது உள்ள நடைமுறை.

இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ''ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும்.

சார்பதிவாளர்கள் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆய்வு செய்வார்.. அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும். எனவே, ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை இனி தேவையில்லை'' என்றார்.

காமராஜர் பிறந்தநாள் விழா.


காமராஜர் பிறந்தநாள் விழா.



திருப்பத்தூர் -ஜூலை 20.
திருப்பத்தூர்  ரத்னா'ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக இன்று பெருந்தலைவர்  காமராஜர் பிறந்தநாளை,  கல்வி வளர்ச்சி நாளை அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விஜயசாந்தி பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தை சீர் செய்யவும், இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 50,000  ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இதில் சங்கத் தலைவர் கிஷோர் பிரசாத், செயலாளர் வினோத் மற்றும் பொருளாளர் சக்கரவர்த்தி , மாவட்ட தலைவர்கள் மஹேஸ்வரன், ஜெனார்த்தனம் , Glt புவனேஸ்வரி,  வட்டார தலைவர் ரத்தினம் மற்றும் சங்க உறுப்பினர்கள் செல்வகுமார், எழில்,திருநாதன் சுரேஷ், கோபி யுவராஜ் , பிரேம் , வெங்கடேஷ், பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர

Sunday, July 19, 2020

ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் பரிகாரம், வழிபாட்டுக்கு தடை

ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் பரிகாரம்,  வழிபாட்டுக்கு தடை
பக்தர்கள் வந்து ஏமாற வேண்டாம்
கோவில் நிர்வாகம் வேண்டுகோள்!

 பவானி-ஜூலை-19
20-07-2020 திங்கள்கிழமை ஆடிமாத அமாவாைசை அன்று பவானி கூடுதுைறயில் பரிகாரம், திதி மற்றும் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில்  புகழ்பெற்ற பரிகாரத் தலமான ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பரிகார பூஜைகள், மூத்தோர் வழிபாடு மற்றும் புனித நீராட அனுமதியில்லை என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் ஆறுகள் , நீர்நிலைகள் சங்கமிக்கும்  இடங்களிலும், ஆற்றோரங்களிலும் மறைந்த தங்களது  மூத்தோருக்கு வழிபாடு செய்தால் , அதன் பலன் நேரடியாக மறைந்த மூத்தவர்களை அடைந்து அவர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.

இவ்வாறு வழிபாடு செய்வதால் குடும்பத்தில் தீமைகள் விலகி நன்மை பிறக்கும் என்பதும் நம்பிக்கை. இதனால், காவிரி, பவானி மற்றும் அமுத நதிகள் சங்கமிக்கும் பிரசித்தி பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில்  ஏராளமானோர் திரண்டு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இன்னிலையில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு உத்தரவின்பேரில் காவிரி ஆற்றில் நீராட செல்லும் வழியில் தடுப்புகள் வைத்துக் கட்டப்பட் டு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆடி அமாவாசை தினமான நாளை திங்கள்கிழமை (ஜூலை.20) பக்தர்கள் கூடுதுறை கூடுதுறைக்கு வர பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது

 இதனால், வெளியூர் பக்தர்கள் வாகனங்களில் பவானி கூடுதுறைக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். வெளியூர் பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து ஏமாற வேண்டாம் என பவானி சங்கமேஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 தடை உத்தரவினைப் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அரசின் உத்தரவை மீறி  வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.


பலே தெனாலிராமா

பலே தெனாலிராமா

https://youtu.be/txwuR_nK8vI

திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர். ஜூலை -19.

இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. எனவே திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் ஆங்காங்கே காவல் துறையினரால் அடைக்கப்பட்டிருந்தது. எனவே சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

காணொலி காட்சி மூலம் அமைச்சர் ஆய்வு


திருப்பத்தூர்-ஜூலை-19.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோயாளிகளின் விபரங்கள் குறித்தும், வணிகவரித்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களிடமும் கலந்துரையாடினார்.

கிருஷ்ணமூர்த்தி,

செய்தியாளர்

மக்கள் சந்திப்பு நாளிதழ்

இன்று ஒரே நாளில் மூன்று தி.மு.க. எம்.எல்.ஏ. க்களுக்கு கொரோணா தொற்று உறுதி

இன்று ஒரே நாளில் மூன்று தி.மு.க.
எம்.எல்.ஏ. க்களுக்கு
கொரோணா தொற்று உறுதி

Gandhi MLA

திருப்பத்தூர்-ஜூலை-19
தமிழகத்தில் தொடர்ந்து கொரோணா தொற்று பாதிப்பு உயர்ந்துகொண்டே வரும் நிலையில் இன்று மொத்த பாதிப்பு 1979 என சுகாதாரத்துறை அறிவித்தது. மேலும் இறப்பு எண்ணிக்கை 78 ஆகும்,

இந்நிலையில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் அவர்களுக்கும். இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி அவர்களுக்கும். கிருஷ்ணகிரி சட்ட மன்ற உறுப்பினர் செங்குட்டுவன் அவர்களுக்கும் இன்று கொரோணா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Follow us Facebook

கொரோனா பாதிப்பு இன்று -19-07-2020

தமிழ் கருடன் செய்திகள் :

திருப்பத்தூர் -ஜூலை -19

  •  இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது.
தமிழகம் முழுவதும் 4979 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . 
  • தமிழகம் முழுவதும் 78 பேர் இறப்பு . 

Saturday, July 18, 2020

இலவச கட்டில், மெத்தை மற்றும் நாற்காலி வழங்கும் விழா


திருப்பத்தூர்-ஜூலை-18
திருப்பத்தூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டுக்கு இலவச கட்டில், மெத்தை மற்றும் நாற்காலி வழங்கும் விழா
திருப்பத்தூர், வேலூர் மேற்கு மாவட்ட கழகசெயலாளர், மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி,
திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.G.ரமேஷ்,
ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் R.ரமேஷ் Ex.சேர்மன், திருப்பத்தூர் நகர செயலாளர்.குமார் ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள ஐசோலேஷன் வார்டிற்கு இலவச கட்டில் ,மெத்தை மற்றும் நாற்காலிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.

கிருஷ்ணமூர்த்தி, மக்கள் சந்திப்பு நாளிதழ், 18.07.2020


Featured Post

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்

திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமா...

POPULAR POSTS